உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / செந்தில் பாலாஜி வழக்கில் சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு Senthil Balaji case | Senthil Balaji vs ED

செந்தில் பாலாஜி வழக்கில் சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு Senthil Balaji case | Senthil Balaji vs ED

செந்தில் பாலாஜி வழக்கில் அதிரடி சீலிட்ட கவரில் அறிக்கை வேண்டும் சுப்ரீம் கோர்ட் பரபரப்பு உத்தரவு தமிழக போக்குவரத்து துறையில் வேலை பெற்று தருவதாக பணம் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க துறையினர் 2023 ஜூன் 14ல் கைது செய்தனர். கடந்த ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியதை அடுத்து சிறையில் இருந்து அவர் வெளியில் வந்தார். உடனடியாக அவருக்கு அமைச்சர் பொறுப்பும் வழங்கப்பட்டது. செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கியதற்கு எதிராகவும், அவர் மீண்டும் அமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்டதற்கு எதிராகவும் பல வழக்குகள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து விசாரிக்கும் சிறப்பு கோர்ட் முடிவுக்கு எதிராக ஒய்.பாலாஜி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

ஜன 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ