உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தூக்கை ரத்து செய்த ஐகோர்ட்: சீரியல் ரேப்பிஸ்ட் செய்த கொடூரம் Serial Rapist ramesh singh mathyaprad

தூக்கை ரத்து செய்த ஐகோர்ட்: சீரியல் ரேப்பிஸ்ட் செய்த கொடூரம் Serial Rapist ramesh singh mathyaprad

பாலியல் குற்ற வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ஒரு காமுகன் மேல் கோர்ட்டால் விடுதலையாகி, மீண்டும் பாலியல் கொடூரத்தில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் ஷாஜாபூர் மாவட்டத்தில் உள்ள பொலாய் கலான் நகரை சேர்ந்தவன் Polaykalan ரமேஷ் சிங். பக்கத்தில் உள்ள முபாரிக்பூர் என்ற கிராமத்துக்கு ரமேஷ் சிங் சென்றான். அங்கு, 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினான். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்து ரமேஷ் சிங்கை மடக்கிப்பிடித்த கிராமத்தினர், அவனை போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் 2003ல் நடந்தது. கோர்ட்டில் குற்றம் நிரூபணமாகி, ரமேஷ் சிங்குக்கு 10 ஆண்டு தண்டனை வழங்கப்பட்டது. 2013ல் விடுதலையாகி வெளியே வந்தான். அதன்பிறகும் அவன் திருந்தவில்லை. அண்டை மாவட்டமான செ ேஹாரில் sehore குடியேறினான். ஒரு கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை பார்த்தான். கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினான். இந்த சம்பவம் 2014ல் நடந்தது.

பிப் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !