உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வாணியம்பாடி அரசு பள்ளி ஆங்கில ஆசிரியர் போக்சோவில் கைது | Sexual abuse to girl students | English tea

வாணியம்பாடி அரசு பள்ளி ஆங்கில ஆசிரியர் போக்சோவில் கைது | Sexual abuse to girl students | English tea

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகா காவலூர் அடுத்த ரெட்டியூர் மலை கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இங்கு ஊத்தங்கரையை சேர்ந்த பிரபு என்பவர் தற்காலிக ஆங்கில ஆசிரியராக பணியாற்றுகிறார். இவர் கடந்த 21ம் தேதி நடந்த கம்ப்யூட்டர் தேர்வின்போது 7ம் வகுப்பு மாணவிகள் 6 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள், குழந்தைகள் உதவி மையம் எண்ணில் புகார் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது 6 மாணவிகளும் ஆசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் அளித்தனர். அதை வைத்து அதிகாரிகள் வாணியம்பாடி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் ஆசிரியர் பிரபுவை கைது செய்தனர். அவர் மீது போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். அரசு பள்ளி மாணவிகள் 6 பேருக்கு தற்காலிக ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிப் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ