உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தரமணி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அதிர்ச்சி சம்பவம் |SFI protest|Police clash|college| Tharamani

தரமணி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அதிர்ச்சி சம்பவம் |SFI protest|Police clash|college| Tharamani

சென்னை தரமணியில் டாக்டர் தர்மாம்பாள் அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி செயல்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரி விடுதியில் இருந்து முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி தனது தோழியுடன் வெளியே சென்றுள்ளார். மாலை 6 மணி வரை விடுதிக்கு திரும்பாத நிலையில் இரவு 10 மணியளவில் ஒரு மாணவி மட்டும் வந்துள்ளார். மற்றொரு மாணவியை பற்றி அவரிடம் கேட்டபோது தனக்கு தெரியாது என கூறியுள்ளார். சனிக்கிழமை காலை உடல் முழுதும் காயத்துடன் வந்த மாணவியை சோதனை செய்தபோது உடலின் பல இடங்களில் கடித்த காயம் இருந்தது தெரிந்தது. மாணவியிடம் நடத்திய விசாரணையில், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான நண்பர் அழைத்ததால் சென்றதாகவும், அங்கு போதை பொருளை கொடுத்து ஏழு பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். நடந்ததை அறிந்த கல்லூரி நிர்வாகம் அதுபற்றி போலீசுக்கு தெரிவிக்காமல் மறைத்துவிட்டதாக கூறப்படுகிறது.

மார் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி