மிரட்டல் விடுத்த நபரை சல்லடை போட்டு தேடும் மும்பை போலீஸ் | Shah Rukh khan| Raipur advocate Threate
ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் போலீசை அதிர வைத்த டுவிஸ்ட்! ராய்ப்பூர் வக்கீலுக்கு நோட்டீஸ் டிஸ்க்: | Bollywood news மகாராஷ்டிராவின் மும்பை பாந்த்ரா போலீஸ் ஸ்டேஷனுக்கு நவ. 5ம் தேதி மர்ம நபர் ஒருவர் போன் செய்தார். பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக்கான், 50 லட்சம் ரூபாய் தராவிட்டால், அவரை கொலை செய்துவிடுவேன் என மிரட்டல் விடுத்தார். கால் வந்த மொபைல் நம்பரை டிராக் செய்த போலீசார், அது சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இருந்து வந்ததை கண்டுபிடித்தனர். உடனே ராய்ப்பூர் போலீசின் உதவியை நாடினர். அந்த நம்பர் ராய்ப்பூரை சேர்ந்த வக்கீல் பியாஸ் கான் என்பவர் பெயரில் பதிவா இருந்தது. அவரிடம் ராய்ப்பூர் போலீசார் விசாரித்தபோதுதான் உண்மை தெரிந்தது. பியாஸ் கான் மொபைல் போன் திருடு போனதும், அதுகுறித்து நவம்பர் 2ம் தேதியே போலீசில் புகார் அளித்திருப்பதையும் உறுதி செய்தனர். திருடு போன பியாஸ் கான் செல்போனில் இருந்த சிம் கார்டை பயன்படுத்தி, மர்ம நபர் ஷாரூக்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பியாஸ் கான் நேரில் ஆஜராக வேண்டும் என மும்பை பாந்த்ரா போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. கொலை மிரட்டல் விடுத்த நபர் யார் என போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.