சக்தி காந்த தாஸ் திறமைக்கு மதிப்பளித்த பிரதமர் மோடி Shaktikanta Das IAS Former RBI governor tamiln
பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச்செயலாளராக இருப்பவர் பிரமோத்குமார் மிஸ்ரா. 2019 முதல் அவர் இந்த பதவியில் இருக்கிறார். 2வது முதன்மை செயலாளராக, ஐஏஎஸ் அதிகாரி சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அமைச்சரவையின் நியமனக்குழு இதற்கான ஒப்புதலை வழங்கியது. சக்தி காந்த தாஸ் யார்? ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் 1957 ல் பிறந்தார். டில்லி ஸ்டீபன்ஸ் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு படித்தார். பிறகு, பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலை பட்டம் பெற்றார். 1980ம் ஆண்டில் தமிழகத்தில் இருந்து ஐஏஎஸ் அதிகாரி ஆனார். 2018 டிசம்பர் 10ம்தேதி ரிசர்வ் வங்கி கவர்னராக சக்திகாந்த தாஸ் நியமனம் செய்யப்பட்டார். தொடர்ந்து, 6 ஆண்டுகள் அந்தப் பொறுப்பில் இருந்தார். ரிசர்வ் வங்கி கவர்னர் பொறுப்பில் இருந்து 2024 டிசம்பர் 12ம்தேதி சக்தி காந்த தாஸ் ஓய்வு பெற்றார். கோவிட் காலத்தில் லாக் டவுனால் நாட்டின் பொருளாதாரமே முடங்கும் சூழல் ஏற்பட்டது.