கிரிக்கெட் வீரரை விமர்சித்தவருக்கு ரசிகர்கள் கண்டனம் | Shama Muhamad | Rohit Sharma
கேப்டன் ரோஹித் குண்டு காங்கிரஸ் நிர்வாகி கமென்ட்! துபாயில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்றைய கடைசி லீக் போட்டியில் நியுசிலாந்தை இந்தியா வென்று அரை இறுதிக்கு முன்னேறியது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா 15 ரன்கள் மட்டும் அடித்து ஆட்டமிழந்தார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் Shama Mohamed ஷாமா முகமது, கேப்டன் ரோஹித்தை விமர்சித்து சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்தார். ஸ்போர்ட்ஸ் மேனாக பார்த்தால் ரோஹித் அதிக எடை கொண்டவராக இருக்கிறார். அவர் எடையைக் குறைக்க வேண்டும். இந்தியா இதுவரை பார்த்த கேப்டன்களில், இவர்தான் மிகவும் ஈர்க்கப்படாதவராக இருக்கிறார் என ஷாமா முகமது கூறினார். அதற்கு, கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஷாமா முகமதுவின் கருத்து, கட்சியின் கருத்து இல்லை என்ற காங்கிரஸ் தெரிவித்தது. இச்சூழலில், ரோஹித் ஷர்மா பற்றி பதிவிட்ட கருத்தை ஷாமா முகமது நீக்கிவிட்டார்.