உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மேஜை தட்டி மார்பில் அடித்து பாகிஸ்தான் பிரதமர் சபதம் | shehbaz sharif on india | india vs pakistan

மேஜை தட்டி மார்பில் அடித்து பாகிஸ்தான் பிரதமர் சபதம் | shehbaz sharif on india | india vs pakistan

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் இருக்கும் தேரா காசி கான் என்ற இடத்தில் ஒரு பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் இந்தியாவை பற்றி ஆவேசமாக பேசினார் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப். கையை உயர்த்தியும் மார்பு, மேஜையில் அடித்தும் இந்தியாவுக்கு எதிராக சபதம் எடுத்து பேசினார். ‛இந்தியாவை வீழ்த்தியே தீருவோம். இல்லை என்றால் என் பெயரையே மாற்றி கொள்கிறேன் என்று ஆர்ப்பரித்தார். அவர் பேசியது: பாகிஸ்தானை கடவுள் ஆசிர்வதிப்பார். நம் நாட்டின் இன்றைய சூழல் மாறும். இரவு பகலாக வெறித்தனமாக உழைத்து பாகிஸ்தானை முன்னுக்கு கொண்டு வருவோம். இந்தியாவை நமக்கு பின்னால் தள்ளுவோம். இது மட்டும் நடக்காவிட்டால் நான் ஷெபாஸ் ஷெரீப் இல்லை. என் பெயரையே மாற்றிக்கொள்கிறேன். பொருளாதாரத்திலும் வளர்ச்சியிலும் இந்தியாவை விட சிறந்த நாடாக பாகிஸ்தானை உருவாக்கி காட்டுவேன் என்றார். மேலும் தனது அண்ணன் நவாஸ் ஷெரீப் பெயரை சொல்லியும் அவர் சபதம் எடுத்தார். நான் நவாஸ் ஷெரீபின் தீவிர ரசிகன். அவர் நடந்த பாதையில் தான் நானும் செல்கிறேன். அவரது ஆசீர்வாதம் எனக்கும் உண்டு. சத்தியமாக சொல்கிறேன், என் உடலில் சக்தி இருக்கும் வரை போராடுவேன். இந்தியாவை தோற்டித்து பாகிஸ்தானை உன்னதமான நாடாக உயர்த்துவேன். மற்ற நாட்டிடம் கையேந்தி நிற்கும் நிலையை மாற்றி பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்ற நாடாக பாகிஸ்தானை உயர்த்தி காட்டுவேன் என்றார் ஷெபாஸ் ஷெரீப். இந்தியாவை தோற்கடிக்காவிட்டால் என் பெயர் ஷெபாஸ் ஷெரீப் இல்லை என்று தனது மார்பையும் மேஜையையும் தட்டி அவர் சபதம் எடுத்த போது மொத்த பாகிஸ்தானியர்களும் ஆர்ப்பரித்தனர். ஆனால் அவர்களையும் பாகிஸ்தான் பிரதமரையும் பார்த்து ஐயோ பாவம் என்று நெட்டிசன்கள் கவலைப்படுகின்றனர்.

பிப் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ