பிரிட்டனிடம் பேசி பரபரப்பை கூட்டிய இந்தியா | Sheikh Hasina | Jaishankar | MEA | Bangladesh Violence
வங்கதேசத்தில் உள்நாட்டு கலவரம் வெடித்ததால், பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்தார். அவசர அவசரமாக அங்கிருந்து விமானத்தில் தப்பினார். இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார். அவரை பாதுகாக்கும் பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொண்டது. இப்போது ரகசிய இடத்தில் அவர் பத்திரமாக உள்ளார். வங்கதேசத்தில் இன்னும் கலவரம் ஓய்ந்தபாடில்லை. இதுவரை 540 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அரசு கவிழ்ந்த பிறகு மட்டும் 240 பேர் மரணம் அடைந்துள்ளனர். ஷேக் ஹசீனாவுக்கு மீண்டும் வங்கதேசம் போகும் திட்டம் இல்லை. அதே நேரம் இந்தியா அவருக்கு தற்காலிகமாக தான் அடைக்கலம் கொடுத்துள்ளது. பிரிட்டனில் ஹசீனாவின் தங்கை ஷேக் ரெஹானாவின் மகள் துலிப் சித்திக் எம்பியாக உள்ளார். எனவே அவர் வசிக்கும் லண்டர் நகரில் ஹசீனா அடைக்கலம் புக இருப்பதாக தகவல் வெளியானது.