யூனுஸின் போலித்தனம்: கொதித்த ஷேக் ஹசீனா Sheikh hasina |Bangladesh | Awami league |
கடந்த ஆண்டு வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர்கள் போராட்டத்தால் அந்நாட்டு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். வங்க தேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. இந்தாண்டு இறுதியில் வங்கதேசத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இச்சூழலில், அவாமி லீக் கட்சியினரிடையே ஆன்லைன் மீட்டிங்கில் பேசிய ஷேக் ஹசீனா, விரைவில் வங்கதேசம் திரும்புவேன் என கூறியுள்ளார். வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் யூனுஸ் மக்களை ஒருபோதும் நேசிக்காதவர். அவர் மக்களுக்கு சின்ன சின்ன கடன்களை அதிக வட்டிக்கு வழங்கி, அதில் வெளிநாடுகளில் ஆடம்பரமாக வாழ்ந்தார். அவருடைய போலித்தனத்தை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவருக்கு நாம் நிறைய உதவி செய்தோம். மக்கள் அதனால் பயன் பெறவில்லை. அவர் மட்டும் நன்மை அடைந்தார். அதன் பிறகு அவருக்கு அதிகாரத்தின் மீது ஆசை வந்துவிட்டது. அதனால் வங்கதேசம் எரிகிறது. நமது கட்சி தலைவர்களும், தொண்டர்களும் கொல்லப்படுகின்றனர். அதை விவரிக்க முடியவில்லை எனது தாய், தந்தை, சகோதரர் உள்பட அனைவரையும் ஒரே நாளில் இழந்தேன். அதனால் உங்கள் சொந்தங்களை இழப்பதன் வலியை என்னால் புரிந்துகொள்ள முடியும். கடவுள் என்னை பாதுகாத்து வருகிறார். அவர் என் மூலமாக சில நன்மைகளைச் செய்ய விரும்பலாம். குற்றம் செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். அது கண்டிப்பாக நடக்கும் என்று ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.