உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கூட்டணியை விட்டு வெளியேற நிர்பந்தம் Shiv Sena Uddhav Facing trouble | Cracks on MVA| Congress|

கூட்டணியை விட்டு வெளியேற நிர்பந்தம் Shiv Sena Uddhav Facing trouble | Cracks on MVA| Congress|

மகாராஷ்டிராவில் சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின், காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணியில் விரிசல் விழும் சூழல் ஏற்பட்டுள்ளது. கூட்டணியில் இடம் பெற்றுள்ள உத்தவ் தலைமையிலான சிவசேனா கட்சி எம்எல்சி அம்பாதாஸ் தான்வே கூறிய கருத்துக்கள் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. லோக்சபா தேர்தலின் போது மகா விகாஸ் அகாடி கூட்டணியில் எங்கள் கட்சி இருந்தது. அதில் கூட்டணி எதிர்பார்த்த வெற்றி பெற்றது. ஆனால் அதே கூட்டணி மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் எடுபவில்லை. இந்த தோல்வியை எதிர்பார்க்கவில்லை. கட்சியின் எதிர்காலம் குறித்து தலைவர் உத்தவ் சிந்திக்க வேண்டிய நேரம் இது. விரைவில் நடக்கவுள்ள மும்பை மாநகாரட்சி தேர்தலில் சிவசேனா உத்தவ் கட்சி தனித்து போட்டியிட வேண்டும் என, கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள், தொண்டர்கள் விரும்புகின்றனர். எனவே கட்சியின் நலன் கருதி வரும் தேர்தலில் தனித்து போட்டியிடுவதே நல்லது என அம்பாதாஸ் தான்வே எம்எல்சி தெரிவித்துள்ளார். மீண்டும் கூட்டணி என்ற பெயரில், தேர்தலில் தோல்வியை தழுவினால், அது கட்சியின் கட்டமைப்பை மேலும் பலவீனப்படுத்தும் எனவும், உத்தவ் கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். அம்பாதாஸ் மற்றும் பிற நிர்வாகிகளின் கருத்து, சிவசேனா உத்தவ் கட்சியில் மட்டுமின்றி, மகா விகாஸ் அகாதி கூட்டணியிலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மும்பை மாநகராட்சியில், சிவசேனா தனிப்பெரும் கட்சியாக திகழ்கிறது. அங்கு கடைசியாக 2017ல் தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 227 வார்டுகளில், 87 இடங்களை ஒருங்கிணைந்த சிவசேனா கைப்பற்றியது. பாஜ 82 இடங்களிலும், காங்கிரஸ் 31 இடங்களிலும் வெற்றி பெற்றது. ராஜ்தாக்கரேவின் எம்என்எஸ் கவுன்சிலர்கள் 7 பேர் மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவுடன், மேயர் தேர்தலில் சிவசேனா வெற்றி பெற்றது. 2022ல் மாநகாரட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலையில், வார்டு மறுவரையறை குறித்த வழக்கால், தேர்தல் தள்ளிப் போனது. தற்போது, தேர்தலை நடத்தி முடிக்க மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில், இன்னும் இரண்டு மாதங்களில் மாநகராட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் துவங்கி நடந்து வருகின்றன.

நவ 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ