உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / செய்தி சுருக்கம் | 01 PM | 14-04-2025 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 01 PM | 14-04-2025 | Short News Round Up | Dinamalar

மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி. இவரது மாமா மெஹுல் சோக்சி. மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,000 கோடி ரூபாய் கடன் பெற்று 2018ல் வெளிநாடு தப்பினர். வெளிநாட்டில் இருந்து வைரம் இறக்குமதி செய்வதாக வங்கி அதிகாரிகளை நம்பவைத்து போலி ஆர்டர்களை காண்பித்து மோசடி செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. நீரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டார். அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் நீரவின் சொத்துக்களை அமலாக்கத் துறை பறிமுதல் செய்தது. மெஹுல் சோக்ஸி மட்டும் ஒவ்வொரு நாடாக சென்று கொண்டிருந்தார். ஆரம்பத்தில் ஆண்டிகுவா தீவில் வசித்தார். பின் மருத்துவ பரிசோதனைக்கு டொனிமிகா தீவிற்கு சென்றார். அங்கிருந்து தனது மனைவியோடு பெல்ஜியத்திற்கு சென்று அங்கு குடியுரிமை வாங்கி வசித்து வந்தார். மெஹூல் சோக்சி மனைவி பிரீத்தி சோக்சி பெல்ஜியம் குடியுரிமை பெற்றவர். அவர் மூலமாக சோக்சி தற்காலிக குடியுரிமை பெற்று பெல்ஜியமில் தங்கினார். அவர் பெல்ஜியத்தில் இருப்பதாக அந்நாடு கடந்த மாதம் தான் உறுதிபடுத்தியது. சோக்சியை பெல்ஜியத்தில் வைத்து கைது செய்ய இந்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்தனர்.

ஏப் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை