உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சைஃப் அலிகானுக்கு கத்திக்குத்து: மும்பையில் பரபரப்பு Saif Ali Khan Stabbed by burglar stabbed

சைஃப் அலிகானுக்கு கத்திக்குத்து: மும்பையில் பரபரப்பு Saif Ali Khan Stabbed by burglar stabbed

சைஃப் அலிகானுக்கு கத்திக்குத்து: மும்பையில் பரபரப்பு Saif Ali Khan Stabbed by burglar stabbed 6 Times admitted in hospital mumbai Lilavati Hospital mumbai police crime இந்தி திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சைஃப் அலிகான். அவரது மனைவி பிரபல நடிகை கரீனா கபூர். மும்பை பாந்த்ரா மேற்கில் உள்ள பங்களாவில் குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். இன்று அதிகாலை சைஃப் அலிகானும், குடும்பத்தினரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். 2.30 மணியளவில் வீட்டினுள் ஒரு திருடன் புகுந்துள்ளான். சைஃப் அலிகான் அறை பக்கம் சென்றுள்ளான். சத்தம் கேட்டு விழித்த சைஃப் அலிகான் திருடனை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அவனை பிடிக்க முயற்சித்தார். சத்தம் கேட்டு வீட்டில் வேலை பார்க்கும் 3 ஊழியர்களும் ஓடிவந்தனர். அதற்குள் திருடனுக்கும், சைஃப் அலிகானுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. மாட்டிக்கொள்வோம் என பயந்த திருடன், கத்தியை எடுத்து சரமாரி குத்தினான். சைஃப் அலி கானுக்கு முதுகு உள்ளிட்ட இடங்களில் கத்திக்குத்து விழுந்ததால் நிலைகுலைந்தார். திருடன் தப்பிஓடிவிட்டான். வீட்டில் வேலை செய்த ஊழியர்கள் திருடனை பிடிக்க முயன்றும் முடியவில்லை. ரத்தம் கொட்டிய நிலையில் அவரை ஊழியர்களும், குடும்பத்தினரும் மும்பையிலுள்ள லீலாவதி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு ஐசியுவில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மொத்தம் 6 முறை திருடன் கத்தியால் குத்தியுள்ளான். அதில் 2 குத்து ஆழமாக விழுந்துள்ளது என டாக்டர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக, முதுகு தண்டுவடம் அருகே ஆபரேஷன் செய்துள்ளதாக, மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. லீலாவதி மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் நீரஜ் உத்தமானி கூறியதாவது: சைஃப் அலிகான் அதிகாலை 3.30 மணிக்கு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார். 6 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. இப்போது, அவரது உடல்நிலை சீராக உள்ளது. உயிருக்கு ஆபத்து இல்லை. தொடர்ந்து டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர் என டாக்டர் நீரஜ் உத்தமானி கூறினார்.

ஜன 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி