சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பேசிய சுபான்ஷூ | Shubanshu shukla | Axiom 4 mission | ISS
சர்வதேச விண்வெளி மையத்திற்கு வீரர்களை அனுப்பும் ஆக்சியம் 4 திட்டத்தின்படி பால்கன்-9 ராக்கெட் மூலம், டிராகன் விண்கலம் நேற்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. மதியம் 12.01க்கு அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இதில் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட அமெரிக்கா, போலந்து, ஹங்கேரி நாடுகளை சேர்ந்த தலா ஒருவர் என 4 பேர் பயணித்தனர். சுமார் 28 மணி நேரத்தில் 418 கி.மீ. பயணித்து இன்று மாலை சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது டிராகன் விண்கலம். இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு பேர் குழுவினர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் சென்றனர். ஏற்கனவே அங்கிருந்த விஞ்ஞானிகள், நான்கு பேரையும் வரவேற்றனர். சுபான்ஷு அங்கு கால் வைத்ததும், சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற முதல் வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. பின்னர் அங்கு பேசிய சுபான்ஷூ, விண்வெளியில் இருந்து பூமியை பார்க்கும் வாய்ப்பை பெற்ற ஒரு சிலரில் தானும் ஒருவராக இருப்பது பெருமை அளிக்கிறது.