ஏர்போர்ட்டில் சுபான்ஷுக்கு அமைச்சர் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு Shubhanshu shukla returns india
அமெரிக்க நிறுவனத்தின் ஆக்ஸியம்-4 திட்டத்தில், இந்தியாவை சேர்ந்த சுபான்ஷு சுக்லா, கடந்த ஜூனில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று வெற்றிகரமாக திரும்பி வந்தார். 41 ஆண்டுகளுக்கு பின் விண்வெளிக்கு சென்ற இந்தியர்; சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற முதல் இந்தியர் என்ற பெருமைகளை சுபான்ஷு பெற்றார். பூமிக்கு திரும்பிய அவர் சில நாட்கள் ஓய்வு மற்றும் பயிற்சிக்கு பின் அமெரிக்காவில் இருந்து இன்று இந்தியாவுக்கு திரும்பினார். இந்த மிஷனுக்காக கிட்டத்தட்ட ஓராண்டாக குடும்பத்தை பிரிந்து இருந்ததாக அவர் கூறியுள்ளார். டெல்லி ஏர்போர்ட்டில் வந்து இறங்கிய சுபான்ஷுவை, முதல் ஆளாக அவரது மகன், துள்ளி குதித்து சென்று கட்டியணைத்தான். மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங், டெல்லி முதல்வர் ரேகா குப்தா, இஸ்ரோ தலைவர் நாராயணன் மற்றும் குடும்பத்தார் உள்ளிட்டோர் சுபான்ஷுவை ஏர்போர்ட்டில் வரவேற்றனர். breat நாடுதிரும்பிய சுபான்ஷு, பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். பின், உத்தர பிரதேசம் லக்னோவிற்கு சென்று குடும்பத்தினரோடு சில நாட்கள் தங்கியிருப்பார். மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர் தான் சுபான்ஷு சுக்லா. விமானப்படை பைலட் ஆக இருந்தவர். அமெரிக்காவின் நாசா மற்றும் ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனம் இணைந்து ஆக்சியம் 4 திட்டத்தில் சுபான்ஷு உட்பட 4 பேரை சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பியது. 4 பேர் குழுவாக சர்வதேச விண்வெளிக்கு சென்ற சுபான்ஷு அங்கு 18 நாட்கள் தங்கியிருந்து பல ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு கடந்த மாதம் பூமிக்கு திரும்பினார். அவரது இந்த விண்வெளி அனுபவம், இந்தியாவின் ககன்யான் திட்டத்துக்கு பயனுள்ளதாக இருக்கும்.