இவர் எவ்வளளோ பரவாயில்லை; CMO அதிகாரிகள் சொல்வது என் Siddaramaiah| Social Media expenses| karnataka
கர்நாடகா முதல்வர் சித்தராமையாவின் அலுவலக மற்றும் தனிப்பட்ட சோஷியல் மீடியா கணக்குகளை கண்காணிக்கவும், நிர்வகிக்கவும் 35 நபர்கள் கொண்டு குழு செயல்படுகிறது. சோஷியல் மீடியா கணக்கை பராமரிப்பதற்காக, கர்நாடகா முதல்வர் அலுவலகம் மாதம்தோறும் 54 லட்சம் ரூபாய் செலவு செய்கிறது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த விவரம் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் இருந்து இந்தாண்டு மார்ச் வரையிலான 6 மாதங்களில் 3.18 கோடி ரூபாய் சித்தராமையாவின் சோஷியல் மீடியாவுக்காக செலவளிக்கப்பட்டு உள்ளது. ஆர்டிஐ ஆர்வலர் மார்லிங்க கவுடா கூறும்போது, நிதிப்பற்றாக்குறையால் கர்நாடகாவில் வளர்ச்சிப்பணிகள் பாதிக்கப்பட்டன. கான்ட்ராக்டர்களுக்கு செட்டில் செய்யவே அரசு திணறியதால், இந்த மனுவை தாக்கல் செய்ததாக கூறினார். கர்நாடகா முதல்வர் அலுவலக அதிகாரிகள் கூறும்போது, கடந்த ஆட்சியில் இருந்தவர்கள் சோஷியல் மீடியாவுக்கு மாதத்திற்கு 2 கோடி வரை செலவு செய்தனர். அதை ஒப்பிடும்போது சித்தராமையா செலவு குறைவுதான் என்றனர்.