உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / யூடியூப் வீடியோ பார்த்து உடல் எடையை குறைக்க முயன்றதால் விபரீதம்: எச்சரிக்கும் சித்த மருத்துவர் Siddh

யூடியூப் வீடியோ பார்த்து உடல் எடையை குறைக்க முயன்றதால் விபரீதம்: எச்சரிக்கும் சித்த மருத்துவர் Siddh

மதுரையை சேர்ந்த கல்லுாரி மாணவி, உடல் எடையை குறைப்பதற்காக, யூடியூப் சேனலை பார்த்து நாட்டு மருந்து கடையில், சில மருந்தை வாங்கி சாப்பிட்டார். இதில், வாந்தி, மயக்கம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இந்நிலையில், டாக்டர்கள் பரிந்துரையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ளக் கூடாது. குறிப்பாக சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு சில பொருட்கள், பிற மருந்துகளுடன் கலந்து வழங்கப்படுபவை. அவற்றை தனியாக சாப்பிட்டால், விளைவுகள் விபரீதமாக இருக்கும். யூடியூப் சேனல்களில் சிலர் சொல்வதை கேட்டு, யாரும் விஷப்பரிச்சையில் இறங்கக் கூடாது. அது உயிருக்கே ஆபத்தாய் முடியும். மருத்து விற்கும் கடைக்காரர்களும், டாக்டர்கள் பரிந்துரை இன்றி மருந்துகளை விற்பனை செய்யக் கூடாது என, அரசு மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வு பெற்ற சித்த மருத்துவர் முத்துகிருஷ்ணசாமி விளக்கம் அளித்தார். #Venkaram| SidhhaMedicine| WeighManagement|

ஜன 20, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை