உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆட்டோவில் ஒடிசாவை சுற்றி பார்த்த சிங்கப்பூர் அதிபர் Singapore President Tharman Visit to India|

ஆட்டோவில் ஒடிசாவை சுற்றி பார்த்த சிங்கப்பூர் அதிபர் Singapore President Tharman Visit to India|

சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் அரசுமுறை பயணமாக இந்தியா வந்தார். ஒடிசாவில் புவனேஸ்வர் அரசு மியூசியத்தில், அதிபர் தர்மன் உள்ளிட்டோரை கவர்னர் ஹரி பாபு, முதல்வர் மோகன் சரண் மாஜி வரவேற்றனர். மியூசித்தில் நம் நாட்டு பாரம்பரியம், கலாசாரத்தை பறைசாற்றும் தொன்மை வாய்ந்த பொருட்களை பார்வையிட்டனர். புவனேஸ்வரில் நடந்த கைவினை பொருள் கண்காட்சியை பார்த்தனர். ஒடிசா பாரம்பரிய கைவினைக் கலைஞர்கள் தங்கள் படைப்புகள் குறித்து, தர்மனிடம் விளக்கினர். அதிபரின் மனைவி, யுபிஐ செயலி மூலம் பணம் செலுத்தி, கைத்தறி புடவையை வாங்கினார். ஆட்டோவில் பயணித்து ஒடிசாவின் அழகை ரசித்த தர்மன். திறன் மேம்பாடு, செமி கண்டக்டர் உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன் மற்றும் அம்மோனியா உற்பத்தி, தொழில் பூங்கா மேம்பாடு, தொழில்நுட்பம் மற்றும் நகர மேம்பாட்டு திட்டங்கள் தொடர்பாக, சிங்கப்பூர் -- ஒடிசா அரசுகள் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

ஜன 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை