ஹமாஸ் தலைவன் சின்வார் மனைவியால் பேசுபொருளான பர்கின் ஹேண்ட் பேக் | Birkin hand bag | Sinwar wife
அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு சில மணி நேரங்களுக்கு முன் ஹமாஸ் தலைவன் சின்வாரின் வீட்டு பதுங்கு குழியில் உள்ள சிசிடிவி காட்சிகளை இஸ்ரேல் ராணுவம் சமீபத்தில் வெளிட்டது. சின்வார் தனது குடும்ப உறுப்பினர்களை அந்த பதுங்கு குழியில் பாதுகாப்பாக வைத்து கொண்டு, தேவையான பொருட்களை அதில் பதுக்கி வைக்கிறார். வெளியே அவரது ஆதரவாளர்கள் நடத்தும் அட்டாக்கை காண உள்ளே ஒரு டிவியையும் கொண்டு செல்கிறார் என இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் நடவ் ஷோஷானி கூறினார். வீடியோவில், சின்வாரின் மனைவி வைத்திருந்த ஒரு ஹேண்ட் பேக் தான் இப்போது உலகம் முழுவதும் தலைப்பு செய்தியாக மாறி இருக்கிறது. காரணம் அது உலகின் மிகவும் பிரபலமான ஹெர்ம்ஸ் பர்கின்(Hermès Birkin) பிராண்டை சேர்ந்தது. அதன் விலை இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 27 லட்சம் ரூபாய். காசா மக்கள் உணவுக்கு பணம் இல்லாமல் தவிக்கும் நிலையில், சின்வாரும், அவரது மனைவியும் பணத்தின் மீது எவ்வளவு ஆசை வைத்திருக்கிறார்கள் என்பதை பார்க்க முடிவதாக இஸ்ரேல் ராணுவம் போட்டோவுடன் விமர்சனம் செய்தது. அப்படி என்ன பெரிய விஷயம். அது ஒரு ஹேண்ட் பேக் தானே என நினைக்கலாம். ஆனால் அது தவறு. இன்றைய மார்க்கெட்டில் ஹெர்ம்ஸ் பிர்கின் விலை 8 லட்சம் முதல் 4 கோடி வரை கிடைக்கிறது. ஆடம்பர உலகில் வாழும் எவருக்கும் ஒரு பர்கின், சாதாரண ஹேண்ட் பேக்கில் இருந்து வெகு இருப்பது நன்கு தெரியும். உலகில் உள்ள அனைத்து பணமும் ஒருவரிடம் இருந்தாலும் ஒரு பர்கினைப் அவரால் பெற முடியாமல் போகலாம். ஹெர்ம்ஸ் ஷோரூமுக்குள் சென்றால் நிச்சயம் உங்கள் விருப்பப்படி ஒரு ஹேண்ட் பேக்குடன் வெளியேற முடியாது.