ஆக்மி 2025: உலக அரங்கிற்கு செல்லும் அம்பத்தூர் | SIPCOT | Ambattur Industrial Estate
சென்னை அம்பத்துார் தொழிற்பேட்டையில் 2,000 தொழில் நிறுவனங்களும், தொழிற்பேட்டையை சுற்றி 5,000 நிறுவனங்களும் செயல்படுகின்றன. அவற்றின் மூலம் ஆண்டுக்கு 20,000 கோடி ரூபாய் வியாபாரம் நடக்கிறது. அதில் 30 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனை மேலும் அதிகரிக்கும் விதமாக ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு ஆக்மி 2025 என்ற பெயரில் இயந்திர கருவிகள் கண்காட்சி வரும் ஜூன் 19 முதல் 23ம் தேதி வரை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடத்தப்பட உள்ளது. அம்பத்துார் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கமான ஏ.ஐ.இ.எம்.ஏ (AIEMA) இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. கடந்த 2023ல் நடந்த கண்காட்சியில், 600 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடந்தது. இந்தாண்டு, 750 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.