உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 10 தொகுதியில் எஸ்ஐஆர் பணிகள் தீவிரம் | SIR | Voter List | Election Commission | Coimbatore

10 தொகுதியில் எஸ்ஐஆர் பணிகள் தீவிரம் | SIR | Voter List | Election Commission | Coimbatore

கோவையில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடந்து வருகிறது. 10 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 31 லட்சத்து 85 ஆயிரத்து 554 வாக்காளர்கள் உள்ளனர். இறந்தவர்கள், முகவரி மாறி சென்றவர்கள், கண்டறிய முடியாதவர்கள், இரட்டை ஓட்டுரிமை உள்ளவர்கள் போன்றவர்களின் விவரங்கள் தனியாக சேகரிக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுதும் இவர்களுடைய எண்ணிக்கை 5 லட்சத்து 6 ஆயிரத்து 394 என கண்டறியப்பட்டிருக்கிறது. மேட்டுப்பாளையம் தொகுதியில் 41,079 பேர், சூலூரில் 43,465, கவுண்டம்பாளையத்தில் 64,072, கோவை வடக்கில் 66,525, தொண்டாமுத்தூரில் 70,049, கோவை தெற்கில் 46,894, சிங்காநல்லூரில் 54,354, கிணத்துக்கடவில் 58,545, பொள்ளாச்சியில் 31,720, வால்பாறையில் 29,691 பேர் இடம் பெற்றுள்ளனர். இறந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 861.

டிச 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !