உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அதிசயம்! 37 ஆண்டுகள் முன் காணாமல் போனவரை கண்டுபிடித்த SIR | Voter Roll Process | Missing Man Found

அதிசயம்! 37 ஆண்டுகள் முன் காணாமல் போனவரை கண்டுபிடித்த SIR | Voter Roll Process | Missing Man Found

எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை பல்வேறு மாநிலங்களில் தேர்தல் கமிஷன் செயல்படுத்தி வருகிறது. இதில் அரசியல் ரீதியாக தமிழகம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சில முரண்பாடுகள் இருந்தாலும் வாக்காளர் பட்டியலை களையெடுக்க இது கட்டாயம் தேவை. இந்த சூழலில் எஸ்ஐஆரால் 37 ஆண்டுகளுக்கு முன்னால் காணாமல் போன ஒருவரை அவரது குடும்பத்தினர் கண்டுபிடித்த சம்பவம் நடந்துள்ளது. மேற்குவங்க மாநிலம் புருலியா கிராமத்தை சேர்ந்தவர் விவேக். அவரது தம்பி பிரதீப். கடந்த 1988ல் வீட்டை விட்டு வெளியேறிய விவேக் எங்கே போனார் என்றே தெரியவில்லை. அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடி அலைந்தும் எந்த பலனும் இல்லை. விவேக் இறந்துவிட்டதாகவே நம்பினர். அவரை தேடும் முயற்சியை கைவிட்டனர். இதற்கிடையே விவேக்கின் தம்பி பிரதீப் நல்ல முறையில் படித்து அரசு அதிகாரி ஆனார். சமீபத்தில் கொல்கத்தாவில் ஓட்டு சாவடி நிலை அலுவலராக நியமிக்கப்பட்டார். அவருக்கு ஒதுக்கப்பட்ட பகுதியை சேர்ந்த மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட எஸ்ஐஆர் விண்ணப்பத்தில் பிரதீப் செல்போன் எண் அச்சிடப்பட்டிருந்தது. அப்போது அவரது செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அது தான் அவரது குடும்பத்தின் 37 வருட தூயரத்தை மாற்றி இருக்கிறது. எதிர்முனையில் பேசியவர் காணாமல் போன விவேக்கின் மகன். ஆரம்பத்தில் அதிகாரியிடம் ஒரு இளைஞன் சந்தேகம் கேட்பது போல தான் உரையாடல் தொடங்கியது. இளைஞன் தனது தந்தை பற்றியும், அவர் 37 ஆண்டுகளுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறியது பற்றியும் பிரதீப்பிடம் சொன்னார். #FamilyReunion #MissingFor37Years #WestBengal #EmotionalStory #ElectionCommission #BoothLevelOfficer #SIRProcess #UnexpectedCall #Heartwarming #IndiaNews

நவ 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை