உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சீர்காழியில் பரபரப்பு ஒரு டன் நாட்டு வெடி சிக்கியது Country made crackers truck seized sirkali

சீர்காழியில் பரபரப்பு ஒரு டன் நாட்டு வெடி சிக்கியது Country made crackers truck seized sirkali

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கோவில்பத்து நான்கு வழிச்சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். லாரி முழுக்க 40 மூட்டைகளில் நாட்டு வெடிகள் இருந்தன. ஒரு டன் நாட்டு வெடிகள் இருந்தன. ஆனால், அதற்கு எந்த ஆவணமும் இல்லை. வெடிபொருட்களை பாதுகாப்பற்ற முறையில் திறந்த வாகனத்தில் கொண்டு சென்றனர். வெடிகள் வெடித்து பெரிய விபத்து ஏற்படும் அளவுக்கு நாட்டு வெடிகளை பாதுகாப்பற்ற முறையில் ஏற்றி வந்துள்ளனர். அதைத் தொடர்ந்து, லாரியுடன் நாட்டு வெடிகளை பறிமுதல் செய்த போலீசார், மக்கள் நடமாட்டம் இல்லாத காலி நிலத்தில் லாரியை நிறுத்தினர். அருகில் யாரும் செல்லாதவாறு போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

அக் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ