உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திமுக அமைப்பாளர் சாய்ப்பு: சிவகங்கையில் பட்டப்பகலில் சம்பவம் sivagangai dmk funcionary praveen kum

திமுக அமைப்பாளர் சாய்ப்பு: சிவகங்கையில் பட்டப்பகலில் சம்பவம் sivagangai dmk funcionary praveen kum

திபுதிபுவென ஓடிவந்த ஆசாமிகள் இளம் திமுக நிர்வாகி சாய்ப்பு பட்டப்பகலில் சம்பவம் அதிர்ச்சியில் சிவகங்கை டிஸ்க்: சிவகங்கை மாவட்டம் சாமியார்பட்டியை சேர்ந்தவர் பிரவீன் குமார். 28 வயது நிரம்பிய இளைஞர். சிவகங்கை மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணை அமைப்பாளராக இருந்தார். இன்று பிற்பகல் 3 மணிக்கு சாமியார் பட்டியில் உள்ள தன் குடும்பத்துக்கு சொந்தமான தோட்டத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, 3 பைக்குகளில் ஐந்தாறு பேர் வந்திறங்கினர். திபுதிபுவென தோட்டத்துக்குள் புகுந்த அந்த ஆசாமிகள், பிரவீன்குமாரை சரமாரியாக வெட்டித் தள்ளினர். சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஒரு சில நிமிடங்களில் பைக்குகளில் மர்ம ஆசாமிகள் பறந்தனர். போலீசார் விரைந்து சென்று பிரவீன்குமார் உடலை கைப்பற்றி சிவகங்கை அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை துவங்கினர்.

ஏப் 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !