சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் மோதல் Sivakasi City Municipal Corporation councillors
சிவகாசி மாநகராட்சி மன்ற அவசரக்கூட்டம் மேயர் சங்கீதா இன்பம் தலைமையில் நடந்தது. அப்போது, கடந்த கூட்டத்தில் தேசிய கீதம் பாடப்படாமல் அவமதிக்கப்பட்டதாக பாஜ கவுன்சிலர் குமரி பாஸ்கரன் பதாகையை கையிலேந்தி எதிர்ப்பு தெரிவித்தார். அருகில் இருந்த காங்கிரஸ் கவுன்சிலர் ரவிசங்கர் எழுந்து, தேசிய கீதம் அவமதிக்கப்படவில்லை என கூறியபடி, பாஜ கவுன்சிலர் பாஸ்கரன் கையில் ஏந்தியிருந்த பதாகையை பிடுங்கினார். இதனால் பாஸ்கரன் ஆவேசமானார். காங்கிரஸ் கவுன்சிலர் ரவிசங்கரை அடிக்க கை ஓங்கினார். மற்ற கவுன்சிலர்கள் ஓடி வந்து பாஜ கவுன்சிலரை கண்டித்தனர். இதனால் கூட்டத்தில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இரு தரப்பையும் மேயர் சங்கீதா சமாதானப்படுத்திய பிறகு கூட்டம் தொடர்ந்தது. போலீசார் பாஜ கவுன்சிலர் பாஸ்கரனை வெளியே கூட்டி வந்து வீட்டுக்கு அனுப்பி வைக்க முயன்றனர். பார்க்கிங் பகுதியில் காங்கிரஸ் கவுன்சிலர்கள் பாஸ்கரனை சூழ்ந்து கொண்டு தாக்க முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.