உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சிவகாசியில் மர்ம கும்பல் வெறி! தேடுகிறது போலீஸ் | Sivakasi | Police Investigation

சிவகாசியில் மர்ம கும்பல் வெறி! தேடுகிறது போலீஸ் | Sivakasi | Police Investigation

விருதுநகர் சிவகாசி அருகே உள்ள நேருஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ் பாண்டி, வயது 21. கொத்தனார் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு வெளியே சென்ற கணேஷ் பாண்டியை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி உள்ளனர். சிவகாசி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை கைப்பற்றினர். ரத்த வெள்ளத்தில் கிடந்த கணேஷ் பாண்டியை சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் கணேஷ் பாண்டி இறந்து விட்டதாக கூறினர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் கணேஷ்பாண்டியின் அண்ணனையும் 5 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்தது.

ஆக 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ