உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சிவகாசியில் ஆணவக் கொலையா? விருதுநகர் எஸ்பி விளக்கம்!

சிவகாசியில் ஆணவக் கொலையா? விருதுநகர் எஸ்பி விளக்கம்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் மெக்கானிக் கார்த்திக் பாண்டியன். வயது 27. இவரும், சிவகாசியை சேர்ந்த பொன்னையா என்பவரது மகள் நந்தினியும் காதலித்தனர். இவர்களின் காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை மீறி இருவரும் சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டு அய்யம்பட்டியில் வசித்தனர். சிவகாசி வீட்டு வசதிவாரிய குடியிருப்பு அருகே உள்ள சூப்பர் மார்க்கெட்டில் நந்தினி பணி செய்து வந்தார். அவரை அழைத்து வருவதற்காக, கார்த்திக் பாண்டியன் பைக்கில் நேற்று இரவு சென்றுள்ளார். அப்போது சூப்பர் மார்க்கெட் வாசலிலேயே கார்த்திக் பாண்டியனை சரமாரியாக வெட்டிவிட்டு மர்ம கும்பல் தப்பியோடியது.

ஜூலை 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை