உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மயானத்தில் நடந்த சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை! Skull | Cremation | Rasipuram

மயானத்தில் நடந்த சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை! Skull | Cremation | Rasipuram

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த கோவிந்தம்பாளையத்தில் மூதாட்டி ஒருவர் இறந்தார். அவரை அடக்கம் செய்ய உறவினர் மயானத்துக்கு சென்றனர். அப்போது அங்கு 6 மனித மண்டை ஓடுகள் வரிசையாக வைத்து எரிக்கப்பட்டிருந்தன. அதன் அருகே அரிவாள், ஆணி, மாந்திரீகம் செய்யும் படங்கள் உள்ளிட்டவை கிடந்ததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து புதுச்சத்திரம் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் போலீசார், கிராம நிர்வாக அலுவலகர்கள் சோதனை நடத்தினர். எரிக்கப்பட்ட மண்டை ஓடுகள் யாருடையது? மாந்திரீக பூஜை நடந்துள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் ராசிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மார் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை