/ தினமலர் டிவி
/ பொது
/ தெலங்கானா சுரங்கத்தில் சிக்கியவர்களை தேடும் பணி தீவிரம்! SLBC Tunnel Rescue Operation | Srisailam in
தெலங்கானா சுரங்கத்தில் சிக்கியவர்களை தேடும் பணி தீவிரம்! SLBC Tunnel Rescue Operation | Srisailam in
தெலங்கானாவின் ஸ்ரீசைலம் இடது கால்வாயில் தண்ணீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட சுரங்கத்தில் பிப்ரவரி 22ல் விரிசல் விழுந்தது. சுரங்கம் தோண்டும் பணியில் இருந்த 50 ஊழியர்கள் உள்ளே சிக்கினர். தேசிய பேரிடர் மீட்பு படையினர் உடனடியாக சுரங்கத்திற்குள் இறங்கி 42 தொழிலாளர்களை மீட்டனர். 2 இன்ஜினியர்கள் உட்பட 8 பேர் உள்ளே சிக்கி கொண்டனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிர கதியில் தொடர்ந்தது. தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், மீட்பு பணிகளில் நிபுணத்துவம் வாய்ந்தோர் என பலரும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சுரங்கப்பாதையில் சிக்கிய 8 பேரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என அதிகாரிகள் கூறப்பட்டது.
மார் 09, 2025