ஸ்டாலின் துவங்கி வைத்தும் யூஸ் ஆகாத ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் Smart City schemes Tirunelveli City M
திருநெல்வேலி மாநகராட்சிக்கு மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 1000 கோடி ரூபாய் நிதியை பல கட்டங்களாக வழங்கியுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திருநெல்வேலி என்.ஜி.ஓ காலனியில் சைக்கிள் பாதை அமைக்கப்பட்டது. ஏற்கனவே உள்ள தார் சாலையின் ஓரத்தில் பச்சை நிறத்தில் பெயிண்ட் அடித்து பிளாஸ்டிக் தடுப்புகளை வைத்து சைக்கிள் பாதையை தனியாக பிரித்தனர். 1.8 கி.மீ. நீளத்திற்கு அமைக்கப்பட்ட இந்தச் சைக்கிள் பாதைக்கு ரூ.2.84 கோடி நிதி செலவழிக்கப்பட்டது. திட்டம் 2021ல் செயல்பாட்டுக்கு வந்தது. ஆனால் 6 மாதங்களுக்குள் அதில் பயனில்லை என்பது வெளிப்பட்டது. குடியிருப்பு பகுதிகள் வழியாக செல்லும் சைக்கிள் பாதையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் சைக்கிள் ஓட்ட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சைக்கிளில் செல்பவர்கள் சாலையிலேயே செல்ல துவங்கினர். மழை நீர் தேங்கி நின்றும் சைக்கிள் பாதை பல இடங்களில் முற்றிலும் சேதமடைந்தது.