உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ராஜ்யசபா எம்பிக்கள் திறம்பட செயல்பட ஊக்கப்படுத்தும் அரசு

ராஜ்யசபா எம்பிக்கள் திறம்பட செயல்பட ஊக்கப்படுத்தும் அரசு

ராஜ்யசபா எம்பிக்கள் தங்கள் கடமையை திறம்பட செய்வதற்காக, டெஸ்க்டாப் கம்ப்யூட்டர், லேப்டாப், பென் டிரைவ், பிரின்டர், ஸ்கேனர், யு.பி.எஸ்., ஸ்மார்ட் போன் ஆகிய சாதனங்களை மத்திய அரசு ஏற்கனவே வழங்கி வருகிறது. இதோடு சேர்த்து, அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்களை வாங்கிக்கொள்ள மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளது. ராஜ்யசபா உறுப்பினர்களின் கணினி சாதனங்களுக்கான நிதி உரிமை திட்டத்தில் இதற்காக நிதி வழங்கப்படும். இந்த நிதியில் இருந்து, ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் திரைகள், ஸ்மார்ட் புரொஜெக்டர், புரொஜெக்டர் திரை டேப்லட் கணினி, கீபோர்ட் ஸ்மார்ட் ஸ்பீக்கர்ஸ், ஸ்மார்ட் கைக்கடிகாரம், ஆன்டி வைரஸ் சாப்ட்வேர், ஹெட்போன், புளூடூத் ஹெட்செட், இயர் பாட்ஸ் உள்ளிட்ட சாதனங்களை எம்பிக்கள் வாங்கி கொள்ளலாம். அசல் ரசீதுகளை அளித்து, அதற்கான தொகையை அரசிடம் இருந்து திரும்ப பெற்றுக் கொள்ளலாம். 3 ஆண்டுகளுக்கு மேல் ராஜ்யசபா எம்பியாக பதவி வகிக்க தேர்வாகும் எம்பிக்களுக்கு தலா, 2 லட்சம் ரூபாய் வரை நிதி வழங்கப்படும். 3 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவான காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களுக்கு தலா, ஒன்றரை லட்சம் ரூபாய் வழங்கப்படும். 3 ஆண்டு பதவிக்காலத்திற்கு பின், குறைந்தபட்ச பதவிக்காலம் ஆறு மாதங்களுக்கு குறையாமல் இருக்கும்பட்சத்தில் நிபந்தனைக்கு உட்பட்டு கூடுதலாக தலா 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

மே 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ