விலங்குகளை விற்பனை செய்யும் சென்னை வாசியிடம் விசாரணை | Smuggled animals
வெளிநாட்டில் இருந்து கடத்தப்பட்ட அரிய வகை வன விலங்குகள் மீட்பு தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து சென்னை ஏர்போர்ட்டில் வந்திறங்கிய விமான பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகரிகள் சோதனையிட்டனர். சென்னையை சேர்ந்த ஆண் பயணி ஒருவர் கொண்டு வந்த உடைமைகளில் சந்தேகம் ஏற்பட்டதால், அதை விரிவாக சோதனையிட்டனர். தாய்லாந்துக்கு சுற்றுலா விசாவில் சென்று நாடு திரும்பிய அவரிடம் இருந்த பிளாஸ்டிக் கூடைக்குள் 2 அரிய வகை மலைப்பாம்புகள் இருந்தன. மற்றொரு கூடையில், அரிய வகை ஆப்பிரிக்க குரங்கு குட்டி, மேலும் சில கூடைகளில் அரிய வகை ஆமைகள், ஆப்பிரிக்க வனப்பகுதியில் காணப்படும் அணில் உள்ளிட்டவை இருந்தன. இது குறித்து மத்திய வன உயிரின குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தியதில், அந்த நபர் தொடர்ந்து வன விலங்குகளை கடத்தியதும், அவற்றை விற்பனை செய்ததும் தெரிய வந்தது. வட சென்னையில் உள்ள அந்த பயணியின் வீட்டிற்கு சென்ற அதிகாரிகள், அங்கிருந்த சில வன விலங்குகளையும் மீட்டனர்.