உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நண்பருடன் பைக்கில் சென்றவருக்கு சோகம் | Snake | Bike | Theni

நண்பருடன் பைக்கில் சென்றவருக்கு சோகம் | Snake | Bike | Theni

தேனி மாவட்டம் கம்பம் சுருளிப்பட்டியை சேர்ந்தவர் மணி. கூலி வேலை செய்கிறார். இவரது மகன் ஹரிஷ், வயது 20. கல்லூரி படிப்பை பாதியில் கைவிட்டு வேலைக்கு செல்கிறார். புதனன்று காலை இவரது நண்பருடன் பைக்கில் சென்றுள்ளார். அப்போது பைக் உள்ளே மறைந்திருந்த பாம்பு வெளியே வந்துள்ளது. ஹரிஷ் நண்பர் கை மீது ஏறியுள்ளது. பதறிப்போன அவர் தட்டிவிட்டார். அப்போது ஹரிஷ் மீது விழுந்த பாம்பு அவரது கையை கடித்துள்ளது. உடனே இருவரும் பைக்கில் கம்பம் அரசு ஆஸ்பிடலுக்கு சென்றனர். அங்கே ஹரிஷ் அட்மிட் செய்யப்பட்டார். விஷமுறிவு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக தேனி அரசு ஆஸ்பிடல் போக வேண்டும் என டாக்டர்கள் கூறியுள்ளனர். ஆம்புலன்ஸ்சில் செல்ல ரெடியான போது திடீரென ஹரிஷ் உடல்நிலை மோசமானது.

ஏப் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !