உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சுரங்க மீட்பு பணிக்கு வந்தது இன்னொரு குழு South central railway| joins rescue team| Telangana

சுரங்க மீட்பு பணிக்கு வந்தது இன்னொரு குழு South central railway| joins rescue team| Telangana

தெலங்கானாவில் ஸ்ரீசைலம் இடதுகரை வாய்க்கால் திட்டத்துக்காக, நாகர் கர்னூல் மாவட்டத்தில் கால்வாய் அமைக்க சுரங்கம் தோண்டப்படுகிறது. கடந்த 22ம் தேதி சுரங்கத்தில்14 கிலோ மீட்டர் உள்ளே தண்ணீர் பெருக்கெடுத்த நிலையில் கட்டுமானம் இடிந்து விபத்து ஏற்பட்டது. ஏராளமானவர்கள் தப்பிய நிலையில் 2 இன்ஜினியர்கள், 2ஆபரேட்டர்கள், 4 தொழிலாளர்கள் என 8 பேர் மட்டும் உள்ளே சிக்கினர். அவர்களை மீட்கும் பணி 7வது நாளாக தொடர்கிறது. ராணுவம், கடற்படை, தேசிய பேரிடர் மீட்புப்படை, எலிவளை சுரங்க தொழிலாளர்கள் என பல தரப்பினரும் மீட்பு பணியில் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர். சுரங்கத்தை குடையும் இயந்திரத்தின் ஒரு பகுதி உடைந்ததால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. சுரங்கத்துக்குள் இரும்பு மற்றும் எஃகு குப்பைகளும் இருப்பதாலும் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.

பிப் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !