உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நீண்ட தூர ரயில்களில் பயணிகள் பாடு திண்டாட்டம் coaches reduced passengers affected

நீண்ட தூர ரயில்களில் பயணிகள் பாடு திண்டாட்டம் coaches reduced passengers affected

unreserved coaches reduced passengers affected Southern Railway order 13 trains ac three-tier coach நீண்ட தூர ரயில்களில் அன்ரிசர்வ்ட் கோச் எனப்படும் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிகள் படாதபாடு படுவதை பார்த்திருப்போம். அந்தளவுக்கு கூட்டம் அலைமோதும். எக்ஸ்பிரஸ் ரயில்களில் 4 முன்பதிவில்லா பெட்டிகள் இருக்கும். அந்த எண்ணிக்கையை 4ல் இருந்து 2 ஆக தெற்கு ரயில்வே குறைத்துள்ளது. சென்னை டு மைசூரு காவேரி எக்ஸ்பிரஸ், சென்னை டு திருவனந்தபுரம் மெயில், சென்னை டு ஆலப்புழை சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் டு நிலம்பூர் ராஜா ராணி எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம் டு வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ஆகிய 5 எக்ஸ்பிரஸ் ரயில்களில் 4ல் இருந்து 2 ஆக முன்பதிவில்லா பெட்டிகள் குறைக்கப்பட்டிருக்கின்றன. சென்னை டு ஈரோடு ஏற்காடு எக்ஸ்பிரஸ், சென்னை டு ஹைதராபாத் டெக்கான் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், சென்னை டு நாகர்கோவில் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் புதுச்சேரி டு மங்களூரு சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், விழுப்புரம் டு காரக்பூர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், புதுச்சேரி டு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் சென்னை டு பாலக்காடு எக்ஸ்பிரஸ், திருநெல்வேலி டு புருலியா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆகிய 8 ரயில்களில் 4ல் இருந்து 3 ஆக முன்பதிவில்லா பெட்டிகள் குறைக்கப்பட்டிருக்கின்றன. இந்த உத்தரவு இன்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கிறது. ஏற்கனவே 4 முன்பதிவில்லா பெட்டிகளில் இடம் போதாமல் ரிசர்வ் பெட்டிகளில் பயணிகள் ஏறிக் கொள்கிறார்கள். அதனால், ரிசர்வ் செய்த பயணிகள் பலவிதமான சிரமங்களை அனுபவிக்கும் சூழலில், முன்பதிவில்லா பெட்டிகளை குறைக்கும் தெற்கு ரயில்வேயின் முடிவு ரிசர்வ் கோச்களில் பிரச்னைகளை அதிகரிக்கத்தான் செய்யும் என, பயணிகள் சொல்கின்றனர். முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையை குறைத்து விட்டு, அதற்கு பதிலாக ஏசி வகுப்பு பெட்டிகளை கூட்ட ரயில்வே முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு எக்ஸ்பிரஸ் ரயிலுக்கும் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணம் செய்ய 600 முதல் 700 டிக்கெட்டுகளை ரயில்வே விற்கிறது. ஆனால், 2 முன்பதிவில்லா பெட்டிகளில் அதிகபட்சமாக 350 பேர் மட்டுமே பயணிக்க முடியும். மற்றவர்கள் எங்கே போவார்கள்? அவர்களை ரிசர்வ் கோச்சுக்கு போகும்படி ரயில்வே நிர்வாகமே நிர்ப்பந்தம் செய்கிறதா? என ரிசர்வ் கோச் பயணிகள் கேட்கின்றனர். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சென்னையில் வேலை பார்த்து விட்டு, அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக செல்லும் ஆலப்புழை எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் மெயில், உழவன் எக்ஸ்பிரஸ் மூலம் மாலை நேரங்களில் வீடு திரும்புவது வழக்கம். இந்த ரயில்களில் 2 முன்பதிவில்லா பெட்டிகளை குறைத்தால் அந்த ரயில்களில் மாலைநேரங்களில் கடும் தள்ளுமுள்ளு ஏற்படும் நிலை உருவாகும் என அவ்வழியாக பயணிப்பவர்கள் வேதனையுடன் சொல்கின்றனர். இதுபோல 26 ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளை குறைத்து, AC பெட்டிகளை இணைக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ஒரு ரயிலில் 2 முன்பதிவில்லா பெட்டிதான் இருக்க வேண்டும் என்ற கொள்கை முடிவு 2 ஆண்டுக்கு முன்பே எடுக்கப்பட்டது. அது, இப்போதுதான் அமல்படுத்தப்படுகிறது என்றனர். ரயில்வேயின் முடிவுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

பிப் 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி