பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயினில் மீண்டம் போராட்டம்: ஐரோப்பிய நாடுகளில் பதற்றம்
#SpainProtest #ItalyProtest #FranceProtest #EuropeanUnionUnrest #Europe #LargeProtestineurope #Unrest ஐரோப்பாவின் பல நாடுகளில் இளைஞர்கள், மாணவர்கள், தொழிற்சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கல்விக்கான நிதி ஒதுக்கீடு, ஊழல் ஒழிப்பு, மலிவு விலையில் வீட்டு வசதி, ஓய்வூதிய பாதுகாப்பு தேவை என்ற கோரிக்கைகளுடன், விலைவாசி உயர்வுக்கு எதிராகவும் பிரான்ஸ், இத்தாலியில் கடந்த வாரம் போராட்டம் நடந்தது. சில இடங்களில் போராட்டம் பெரும் கலவரமாக மாறியதால் பதற்றமான சூழல் உருவானது. கண்ணீர் புகை குண்டுகள் வீசியும், தடியடி நடத்தியும் போலீசார் கலவரத்தை ஒடுக்கினர். கடந்த சில நாட்களாக போராட்டங்கள் தணிந்த நிலையில், பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் நாடுகளில் மீண்டும் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன.