ரவிக்கை, சட்டை அணியாமல் வனப்பகுதியில் வினோத வழிபாடு | Aadi padaiyal fest | Special pooja | karuppar
1000 கிடாய்களை சமைத்து கருப்பருக்கு மகா படையல் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கிழவயல் வனப்பகுதியில் சங்கிலி கருப்பர் கோயில் உள்ளது. கிழவயல், மணியாரம்பட்டி, பொன்னடப்பட்டி , அம்மன்குறிச்சி உள்ளிட்ட பகுதி மக்கள் சங்கிலி கருப்பரை வழிபடுகின்றனர். இந்த நிலையில் விவசாயம் செழிக்கவும், நோயின்றி வாழவும் வேண்டி 25 ஆண்டுகளுக்கு பின் கோயிலில் ஆடி படையல் விழாவை நடத்த முடிவு செய்தனர். இன்று காலை அத்தனை கிராம மக்களும் ஒன்று கூடி முன்னோர் வழக்கப்படி பெண்கள் ஆண்கள் மேலாடை இன்றி கோயிலில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து சாமியாடி அருள் வாக்கு கூறிய பின், 1,000-க்கும் மேற்பட்ட கிடாய்கள் நேர்த்திக்கடனாக பலியிடப்பட்டன. பலியிட்ட கிடாய் இறைச்சியை பாரம்பரிய முறைபடி தீயில் வாட்டி சமைக்க தொடங்கினர். சமைத்த உணவை நள்ளிரவு கருப்பருக்கு படையல் இட்டபின் மக்களுக்கு அசைவ விருந்தாக பரிமாறப்பட்டது.