உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆகஸ்ட் 14 முதல் 19 வரை சிறப்பு ரயில்கள் | Special trains | Independence day | Southern railway | Tra

ஆகஸ்ட் 14 முதல் 19 வரை சிறப்பு ரயில்கள் | Special trains | Independence day | Southern railway | Tra

சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதன்படி வரும் 14ம் தேதி சென்னை எழும்பூர் - செங்கோட்டை இடையே எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அன்று இரவு 9.55 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் 15ம் தேதி காலை 11.30 மணிக்கு செங்கோட்டை சென்றடைகிறது. மறுமார்க்கமாக 17ம் தேதி இரவு 7.45 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு 18ம் தேதி காலை 9.05 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். அதேபோல் 14ம் தேதி சென்னை சென்ட்ரல் - போத்தனூர் இடையே அதிவிரைவு சிறப்பு ரயில் ஒன்றும் இயக்கப்படுகிறது. அன்று இரவு 11.50 மணிக்கு சென்ட்ரலில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 8.30 மணிக்கு போத்தனூர் சென்றடையும். மறுமார்க்கமாக 17ம் தேதி இரவு 11.30 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 8.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடைகிறது. மங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து, 14, 16 தேதிகளில் திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்திற்கு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்களையும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அந்த தேதிகளில் மாலை 7.30 மணிக்கு மங்களூருவில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும். மறுமார்க்கமாக 15, 17 தேதிகளில் மாலை 5.15 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 6.30 மணிக்கு மங்களூருவை அடையும். இதேபோல் 17ம் தேதி நாகர்கோவில் - தாம்பரம் இடையே அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அன்று இரவு 11.15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 10.55 மணிக்கு தாம்பரம் சென்றடையும். மறுமார்க்கமாக 18ம் தேதி மதியம் 3.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், 19ம் தேதி அதிகாலை 5.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு வெள்ளியன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

ஆக 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !