மூத்த குடிமக்களுக்கான ஸ்பெஷல் திட்டம் | Spiritual journey | Senior citizens | TN Govt | Special plan
ஆடியில் ஆன்மிக பயணம் செல்ல நீங்க ரெடியா! இந்து சமய அறநிலையத் துறை சார்பில், ஆடி மாதத்தில் புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு, மூத்த குடிமக்களை கட்டணமில்லா ஆன்மிக பயணம் அழைத்துச் செல்ல தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை, தஞ்சாவூர், கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி மண்டலங்களை தலைமையிடமாகக் கொண்டு, 1,000 மூத்த குடிமக்கள் அழைத்துச் செல்லப்பட உள்ளனர். ஆடி மாத ஆன்மிக பயணம் 4 கட்டங்களாக வரும் 19, 26, ஆகஸ்டு 2, 9ம் தேதிகளில் தொடங்குகிறது. இதில், 60 - 70 வயதுக்குட்பட்ட மூத்த குடிமக்கள், வரும் 17ம் தேதிக்குள் விண்ணப்பித்து வாய்ப்பு பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இந்து சமய அறநிலைய அதிகாரிகள் கூறியதாவது, பக்தர்கள் இந்து மதத்தை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். வயது சான்றிதழுடன் ஆதார் கார்டு அல்லது பான்கார்டு இணைக்க வேண்டும். சிறு குழந்தைகளை அழைத்துவர அனுமதியில்லை. விண்ணப்பங்களை அறநிலைய துறை இணை ஆணையர், உதவி ஆணையர், ஆய்வாளர், கோயில் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம்.