ஜூஸ், ரொட்டி மாவு முதற்கொண்டு கலக்கப்பட்ட அதிர்ச்சி | Split On food | Food Safety | uttarakhand
உணவில் எச்சில் துப்பும் விஷமிகள்! ஓட்டல்களில் நடக்கும் பகீர் சம்பவம் உத்தரகண்ட் மாநிலம் முசோரிக்கு வந்த சுற்றுலா பயணிகளுக்கு ஜூஸில் எச்சில் துப்பி பரிமாறிய இரண்டு ஓட்டல் ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். மற்றொரு சம்பவத்தில் டேராடூனை சேர்ந்த சமையல்காரர் ஒருவர் ரொட்டிக்கு மாவு பிசையும் போது அதில் எச்சில் துப்பியது வெளிச்சத்துக்கு வந்தது. இந்த இரு சம்பவங்களும் மக்கள் மத்தியில் அச்சத்தை உண்டாக்கியது. இப்படி விஷமத்தனமான செயல்களில் ஈடுபடுவோர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். இது போன்ற சம்பவங்களை எதிர்கொள்ள உத்தரகண்ட் மாநில அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலையோர உணவகங்கள், தள்ளுவண்டி கடைகளை கண்காணிக்க உள்ளூர் சுகாதார பிரிவினரை மாவட்ட போலீசார் பயன்படுத்த வேண்டும். ஹோட்டல்களில் பணியாளர்களை நியமிக்கும்போது அவர்களின் பின்னணி குறித்து 100 சதவீதம் உறுதிசெய்த பின் பணியமர்த்த வேண்டும்.