உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆவின் செய்த திருட்டுத்தனம்: விஞ்ஞான ரீதி ஏமாற்றுவேலை aavin GST rate reduced Tamil Nadu Milk Agents

ஆவின் செய்த திருட்டுத்தனம்: விஞ்ஞான ரீதி ஏமாற்றுவேலை aavin GST rate reduced Tamil Nadu Milk Agents

பதப்படுத்தப்பட்ட பால், தயிர் மற்றும் பன்னீர் வகைகளுக்கு ஜிஎஸ்டி வரி 5 சதவீதத்தில் இருந்து 0 ஆக குறைக்கப்பட்டுள்ளது. நெய், வெண்ணெய், சீஸ் உள்ளிட்ட பால் பொருட்களுக்கு 12%லிருந்து 5% ஆகவும், ஐஸ்கிரீமு 18%லிருந்து 5% ஆகவும் ஜிஎஸ்டியை மத்திய அரசு குறைத்துள்ளது. புதிய வரி விகிதங்கள் இன்று அமலுக்கு வந்துள்ள நிலையில், மத்திய அரசின் வரி குறைப்பின் பலனை மக்களுக்கு அளிக்கும் வகையில் அமுல், நந்தினி போன்ற நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பு பால் பொருட்களின் விலையை குறைத்துள்ளது. ஆனால், தமிழக அரசின் ஆவின் நிறுவனம் வரி குறைப்புக்கேற்றவாறு விலை குறைப்பை அறிவிக்கவில்லை. மாறாக, நெய், பன்னீர் ஆகியவற்றின் விலையில் தள்ளுபடியை அறிவித்து மக்களை விஞ்ஞான ரீதியாக ஏமாற்றுவதாக, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி தலைவர் குற்றம்சாட்டினார். பைட் பொன்னுசாமி பால் முகவர், தொழிலாளர்கள் சங்கம் 15 to 3.40 வாய்ஸ் வரி குறைப்பின் பலனை மக்களுக்கு தமிழக அரசு வழங்காதது அப்பட்டமான திருட்டுத்தனம் என பாமக தலைவர் அன்புமணி சாடியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு: ஜி.எஸ்.டி வரி குறைப்புக்குப் பிறகும் தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் அதன் பால் பொருள்களின் விலைகளை குறைக்கவில்லை என்று குற்றஞ்சாட்டி இன்று காலை நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதைத் தொடர்ந்து, ஜி.எஸ்.டி வரிக்குறைப்புக்கு ஏற்ற வகையில் ஆவின் பால் பொருள்களின் விலை குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக அரசின் சார்பில் ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டு, அவை செய்தியாக ஒளிபரப்பாகி வருகின்றன. ஆவின் பால்பொருள்களின் விலை குறைக்கப்படவில்லை; இது மக்களை ஏமாற்றும் முயற்சி என்பது தான் உண்மை. ஜி.எஸ்.டி குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கேற்றவாறு பால் பொருட்களின் விலை குறைக்கப்பட வேண்டும். ஆனால், ஆவின் நிறுவனம் அவ்வாறு செய்யவில்லை. மாறாக, ஆவின் பால் பொருள்களின் அதிகபட்ச விற்பனை விலையில் எந்த மாற்றத்தையும் செய்யாத ஆவின் நிறுவனம், வரி எந்த அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளதோ, அதற்கு ஏற்றவாறு அடிப்படை விலையை உயர்த்தியுள்ளது. எடுத்துக்காட்டாக ஒரு கிலோ நெய்யின் அதிகபட்ச விற்பனை விலை ரூ.700. இதில் அடிப்படை விலை ரூ.625. 12% ஜி.எஸ்.டி வரி ரூ.75 ஆகும். ஆவின் நெய் மீதான ஜி.எஸ்.டி வரி 5% ஆக குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் மதிப்பு ரூ.31 மட்டும்தான். அதன்படி பார்த்தால் ஆவின் நெய் ஒரு கிலோ ரூ.656-க்கு மட்டுமே விற்கப்பட வேண்டும். அமுல் , நந்தினி போன்ற பொதுத்துறை பால் நிறுவனங்கள் இந்த அடிப்படையில் தான் விலைக்குறைப்பு செய்துள்ளன. ஆனால், ஆவின் நிறுவனமோ ஒரு கிலோ நெய்யின் அடிப்படை விலையை ரூ.625ல் இருந்து ரூ.669 ஆக உயர்த்தி அத்துடன் ரூ.31 ஜி.எஸ்.டி விலையை சேர்த்து அதிகபட்ச விலையாக ரூ.700 என நிர்ணயித்துள்ளது.

செப் 22, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

koderumanogaran
செப் 25, 2025 15:09

நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து செலவு என்ற பெயரில் பால் மற்றும் பால் பொருள்களின் விலையை மற்ற மாவட்டங்களைக்காட்டிலும் கூடுதலாக விற்று வருகிறது.அதனால்ஜி.எஸ்.டி குறைப்பதால் நீலகிரி மக்களுக்கு எந்த பலனும் இல்லை.ஆனால் தி.மு.க விற்க்கு ஓட்டு போட்டு விட்டு புலம்பு வோம்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை