உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஐஏஎஸ் படிக்கும் பெண்ணுக்கு 90 நாள் நடந்த அக்கிரமம்! | spy camera | Crime News | Delhi Police

ஐஏஎஸ் படிக்கும் பெண்ணுக்கு 90 நாள் நடந்த அக்கிரமம்! | spy camera | Crime News | Delhi Police

உத்திரபிரதேசத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு தயாராகி வந்தார். எந்தவித தொந்தரவும் இல்லாமல் தேர்வுக்கு தயாராக டில்லி ஷகர்பூரில், ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கினார். தன்னுடைய சொந்த ஊருக்கு செல்லும்போதெல்லாம், வீட்டு சாவியை ஹவுஸ் ஓனரின் மகனான கரணிடம் இப்பெண் ஒப்படைத்து செல்வது வழக்கம். இந்த சூழலில் சமீபத்தில் வீடு திரும்பிய அப்பெண்ணுக்கு கரணின் நடவடிக்கையில் சந்தேகம் வந்துள்ளது. மாணவியின் வீட்டிற்குள் எப்படியாவது நுழைந்து விட வேண்டும் என்பதிலேயே கரணின் பேச்சு இருந்துள்ளது. எலக்ட்ரிக்கல் வேலை, ஒயரிங் வேலை என அவ்வப்போது வந்து சென்றுள்ளார். அப்படி வந்த போது பாத்ரூம் கதவு பக்கமே அவர் நின்றது இந்த பெண்ணுக்கு கூடுதல் சந்தேகத்தை கிளப்பியது. கரண் கிளம்பிய பின் உள்ளே சென்று இன்ச் இன்ச்சாக சோதனை செய்தார். பல்ப் ஹோல்டரில் ரகசிய கேமரா இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

செப் 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை