கோர்ட் உத்தரவை மதிக்காத CMRL: களத்தில் பக்தர்கள்! Sri Durgai Amman Temple | TR Ramesh | HRCE
சென்னை வைட்ஸ் ரோட்டில், பழமையான துர்க்கை அம்மன் கோயில் இருக்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்து செல்கின்றனர். மெட்ரோ பணி என்ற பேரில், துர்கை அம்மன் கோயில் அருகில் மெட்ரோ நிர்வாகம் பணிகளை தொடங்கியது. கோயில் அருகே கனரக இயந்திரங்களை வைத்து வேலை செய்வதால், பழங்கால கோயிலுக்கு பாதிப்பு ஏற்படுமென பக்தர்கள் கூறினர். பணிகளை நிறுத்தி, மாற்று பாதையை தேர்ந்து எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை வைத்தும், மெட்ரோ பணிகள் தொடர்ந்து நடந்தது. இதனையடுத்து மெட்ரோ பணிகளுக்கு எதிராக, ஆலயம் காப்போம் அமைப்பு சார்பில், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து கடந்த 23ம் தேதி, துர்கை அம்மன் கோயில் அருகே, அனைத்து மெட்ரோ ரயில் பணிகளுக்கும் கோர்ட் இடைக்கால தடை விதித்தது. இருப்பினும் ஐகோர்ட் உத்தரவை மதிக்காமல் மெட்ரோ வேலைகள் நடப்பதாக புகார் எழுந்துள்ளது.