மலைப்பாதையில் சென்ற பஸ் கவிழ்ந்து 15 பேர் உயிரிழப்பு Sri Lanka Bus Accident| 15 dead in Sri Lanka|
இலங்கையின் தங்கல்லே நகரை சேர்ந்த 30 பேர் உவா மாகாணம் பதுளே மாவட்டத்திற்கு பஸ்சில் சுற்றுலா சென்றனர். வியாழக்கிழமை இரவு மலைப்பாங்கான பகுதியில் சென்ற பஸ், எதிரே வந்த ஜீப் மீது மோதியது. இதில் தாறுமாறாக ஓடிய பஸ், 1000 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. பள்ளத்தில் விழந்த பஸ் சுக்குநுாறாக நொறுங்கியது., பஸ்சில் இருந்த 9 பெண்கள் உட்பட 15 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 15 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அனைவரும் அங்குள்ள ஆஸ்பிடலில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையின் தெற்கு பகுதியில் உள்ள பதுளே மாவட்டம் காடுகள், மலைகள் நிறைந்த பகுதியாகும். இயற்கை எழில் கொஞ்சும் இந்த பகுதியை காண பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் சுற்றுலா மேற்கொள்வது வழக்கம். பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து, 15 பேர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சாேகத்தை ஏற்படுத்தி உள்ளது. மலைப்பாதையில் மோசமான சாலை, வாகன பாதுகாப்புக்கு தடுப்பு கம்பிகள் அமைக்காதது, டிரைவரின் அதிவேகம் என பஸ் கவிழ்ந்ததற்கு பல காரணங்களை உள்ளூர் மக்கள் சொல்கின்றனர். இது குறித்து உள்ளூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். சுற்றுலா செல்வதற்கு முன் பஸ் சரியான கன்டிஷனில் இருந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #SriLankaNews| #SrilankaBusAccident| #15DeadinSrilanka|