உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இதுவரை இலங்கை வரலாற்றில் நடக்காத சம்பவம் | Sri Lanka Election Result | Sri Lanka Election

இதுவரை இலங்கை வரலாற்றில் நடக்காத சம்பவம் | Sri Lanka Election Result | Sri Lanka Election

கடும் பொருளாதார நெருக்கடிக்கு பிறகு செப்டம்பர் 21ல் இலங்கை அதிபர் தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 2 கோடியே 20 லட்சம் மக்கள் தொகையில் 1 கோடியே 70 லட்சம் பேர் ஓட்டு போட தகுதி பெற்றிருந்தனர். இதில் 75 சதவிகித ஓட்டுகள் பதிவானது. இலங்கை தேர்தல் ஆணைய விதிப்படி மொத்தம் பதிவான ஓட்டுகளில் 50 சதவிகித்துக்கும் மேல் பெறுவது கட்டாயம். 50 சதவிகித ஓட்டுகளுக்கும் மேல் பெற்று முன்னிலையில் இருப்பவர் அதிபராக தேர்வு செய்யப்படுவார். இதுவரை இலங்கை அதிபராக தேர்வு செய்யப்பட்டவர்கள் யாரும் 50 சதவிகித ஓட்டுகளுக்கு கீழ் பெறவில்லை. ஆனால் வரலாற்றில் முதல் முறையாக இந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனது.

செப் 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை