அரசு கட்டி கொடுத்த புது வீடா இது? | Sri Lankan refugees | House
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மின்னூரில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு மையம் உள்ளது. இங்குள்ளவர்களுக்கு 12 கோடி ரூபாயில் 236 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 29ல் அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், எ.வா வேலு தலைமையில் பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்பட்டது. கொடுத்து இரண்டு வாரம் கூட ஆகாத நிலையில் மயூரான்- விஜி தம்பதியினர் வீடு சேதமடைந்துள்ளது. கூரை சிமெண்ட் பூச்சுகள் முழுவதும் பெயர்ந்து விழுந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் குழந்தைகளுடன் தங்களது பழைய வீட்டுக்கே சென்று தங்கி உள்ளனர். இதே போல பல வீடுகளின் சுவற்றில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது.
செப் 17, 2024