உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியாவில் வசிக்கும் அகதிகளுக்காக விதிகளை தளர்த்தியது இலங்கை அரசு

இந்தியாவில் வசிக்கும் அகதிகளுக்காக விதிகளை தளர்த்தியது இலங்கை அரசு

#SrilankanTamils #Refugees #Srilanka #GovernmentofSrilanka #IndianEmbassy #SrilankaEmbassy #SrilankaParliament இலங்கையில் கடந்த 1983ல் வெடித்த இனக்கலவரம் மற்றும் உள்நாட்டு போர் காரணமாக, ஆயிரக்கான இலங்கை தமிழர்கள் அகதிகளாக நம் நாட்டிற்கு வந்தனர். கடந்த, 2002 முதல் 2022 காலகட்டத்தில் 18,000 பேர் மட்டுமே நாடு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 90,000 பேர் வசிக்கின்றனர். இந்த நிலையில், இலங்கை தமிழர்கள் நாடு திரும்பும் விதிகளை தளர்த்தி, அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து அந்நாட்டு பார்லிமென்ட்டில், பொது பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆனந்த வஜேபால விளக்கினார். இந்தியாவில் இருந்து தாமாக முன்வந்து நாடு திரும்ப விரும்பும் இலங்கை தமிழர்கள், சென்னையில் உள்ள துாதரகத்தை தொடர்பு கொண்டு தங்களின் விருப்பத்தை பதிவு செய்யலாம். கடந்த 2006 ஆக்ஸ்ட் 1க்கு முன் பாஸ்போர்ட் இன்றி வெளியேறிய இலங்கை நாட்டவர்கள், மாநில புலனாய்வு பிரிவு மூலம் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படுவர். காெலை, தேச துரோகம் போன்ற எந்த ஒரு தீவிர குற்றச்சாட்டுகளும் இல்லாதவர்கள், தற்காலிக பாஸ்போர்ட்டுடன் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவர்.

ஆக 20, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !