விமானத்தில் ஓட்டை போட்ட ஐஸ் மழை-கதறி அழுத பயணிகள் srinagar flight issue | indigo 6e2142 | hailstorm
டில்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு 227 பயணிகளுடன் புதன்கிழமை மாலை இண்டிகோ 6E2142 என்ற விமானம் புறப்பட்டது. நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென வானிலை மோசம் அடைய ஆரம்பித்தது. ஸ்ரீநகரை நெருங்கியதும் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை வெளுத்து வாங்கியது. பெரிய பெரிய ஐஸ் கட்டியாக மழை விழுந்தது. விமானம் மீதும் சரமாரியாக ஐஸ் கட்டிகள் விழுந்தன. மொத்தமாக ஐஸ் கட்டிகள் விழுந்ததில் விமானத்தின் மூக்கு பகுதி உடைந்து ஓட்டை விழுந்தது. உடனே பைலட் அவசர நிலையை பிறப்பித்தார். மொத்த பயணிகளும் பீதி அடைந்தனர். விமானம் முழுதும் அழுகையும் கூக்குரலும் கேட்டது. பலர் தங்கள் கடவுளை நோக்கி பெரிய சத்தத்துடன் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தனர். இருப்பினும் பைலட் சாதூரியமாக செயல்பட்டார். விமானத்தை பத்திரமாக ஸ்ரீநகர் ஏர்போர்ட்டில் தரை இறக்கினார். மூக்கு பகுதி உடைந்த நிலையிலும் விமானம் பத்திரமாக தரை இறங்கியதால், உள்ளே இருந்த 227 பயணிகளும், விமான ஊழியர்களும் உயிர் தப்பினர்.