முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை | Stalin | Pasumpon
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் 117வது ஜெயந்தி விழா மற்றும் 62வது குருபூஜை விழா இன்று நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். அழகர்கோவில் சாலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் இரவில் தங்கினார். இன்று காலை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தெப்பக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மருது சகோதரர்களின் சிலைகளுக்கும் மாலை அணிவித்தார். அங்கிருந்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் சென்ற முதல்வர் ஸ்டாலின், முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதில் அமைச்சர்கள் பெரியசாமி, தங்கம் தென்னரசு, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், ராஜ கண்ணப்பன், ராஜா, அன்பில் மகேஷ், கீதா ஜீவன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி பசும்பொன்னில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.