மோடியை ஸ்டாலின் சந்தித்ததும் நிகழ்ந்த மாயம்
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டம் பல மாதங்களாக கிடப்பில் இருந்தது. தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்து, நிதி ஒதுக்கும்படி கோரினார். மத்திய அமைச்சரவை, இதற்கான அனைத்து வேலைகளையும் ஒரே நாளில் முடித்து, அனுமதியும் வழங்கியது. இந்த விவகாரத்தில், பல அமைச்சகங்களின் அனுமதி தேவை. இந்த விவகாரத்தை கவனிப்பது, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை. இதன் அமைச்சர், ஹரியானாவின் முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார். அவர், ஹரியானா சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் பிசியாக இருந்ததால், இத்திட்டத்திற்கு அவர் செய்ய வேண்டிய வேலைகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தார்.
அக் 06, 2024